மார்கழித் திங்கள்


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
(திருப்பாவை 01)


இன்று மார்கழி முதல் அடியெடுத்து வைக்கிறாள். மார்கழி முதல் நாள் காலை 5:30 மணிக்கே எழுந்துவிட்டேன் (இந்தியா-ஆஸி மேட்ச் மிஸ் பன்ன முடியுமா? ;-) ).
திருவாரூரில் இருக்கும் பொழுது "மார்கழித் திங்கள் மடி நிறைய பொங்கல்" என்று ஆரம்பிக்கும் மார்கழி இவ்வருடம் சர்க்கரைப் பொங்கலோடு ஆரம்பித்திருக்கிறது. 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியா ஆஸ்திரேலியாவை அவர்கள் கோட்டையிலேயே வென்றிருக்கிறது, நல்ல ஆரம்பம். ஹேலியின் வால்நட்சத்திரத்தைப் பார்த்தது போல் குஷி எனக்கு (அடுத்த முறை பார்ப்பதற்கு எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ?).

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்