விஜயபுரத்து விஜயம்
Permanent Address:
17 தி. அக்ரஹாரம்
விஜயபுரம்
திருவாரூர் - 610 001
முகவரியை எழுதும்போதே நினைவுகள் பின்னோக்கி செல்லத்துவங்கின. பத்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து அங்கே இருந்ததாக கடந்த பத்து வருட ஞாபகங்கள் சொல்லவில்லை. ஆனால் பத்து வருடங்கள் ஆகியும் அந்த நினைவுகள், இன்றும் சுகமான அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
எப்படி மறக்க முடியும் அந்த முகவரியை, அந்த வீட்டை, அந்த நினைவுகளை.
இனிஷியலோடு கூடிய ஒரே தெரு அந்த "தி. அக்ரஹார"மாகத்தானிருக்க முடியும். பலவருடங்களாக எனக்கு அந்த இனிஷியல் விவகாரம் விளங்கவில்லை, பின்னர் தமிழ் வாத்தியாரிடமிருந்து திட்டுக்களோடு வந்த தமிழ் எழுத்துருவங்கள், தெரு முனையில் இருந்த பலகையைப் படிக்க உதவின. அப்பொழுது தான் தெரிந்தது அது "தியாகராஜபுரம் அக்கிரகாரம்" என்று (தற்பொழுது வேறொரு பலகை "தியாகராஜபுரம் தெரு" என்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது).
கிழக்கும் மேற்குமாக அமைந்ததாலோ என்னவோ, தெருவின் இரு முனைகளிலும் இரு கோவில்கள். மேற்கு எல்லையில் லெக்ஷ்மி நாராயணப்பெருமாளும், கிழக்கு எல்லையில் வினாயகரும் குடிபெயர்ந்திருந்தார்கள். பெருமாள் கோவிலிருந்து நான்காவது வீடு எங்களுடையது, எங்களுடையது என்பதில் அழுத்தம் மிகுதியாகக் கொடுக்கவேண்டும். அப்பாவும், சித்தப்பாவும் சேர்ந்து கூட்டாக கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னே குடிபெயர்ந்து, இன்றும் அங்கே தொடர்கிறார்கள்.
அந்த காலத்திற்கே உண்டான அமைப்புடன் வீடு. வாசலில் வலது புறம் ஒரு சிறிய தின்னை, தொடர்ந்தாற் போலிருந்த ரேழியில் ஒரு பெரிய தின்னை, மிகப்பெரிய ஹால், மித்தம் (முற்றம்), அக்ரஹாரத்தையும் நாகப்பட்டிண ரஸ்தாவையும் இனைக்கும் கொல்லைப்புற வழி, கினறு, மாமரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். வீட்டின் கொல்லையிலிருந்து வாசற்புரம் ஓடி வருவதற்குள் அன்று படித்த பத்தாம் வாய்பாட்டை ஒருமுறை ஒப்புவித்துவிடலாம். ஆனால் சித்தப்பா கொல்லைக்கு வந்தால் போதும் அதில் பாதி நேரம் கூட எடுக்காது, தெருமுனைக்கே போய்விடுவேன்.
விஜயபுரத்து விஜயம் இன்னமும் தொடரும்.

0 Shouts:
Post a Comment
<< Home