அக்னிப் பரீட்சை

சமீபத்தில் திருவாரூர் சென்றிருந்த பொழுது அங்கு(ம்) ஒரு இன்டெர்நெட் மையத்தில் (அட அமாங்க, திருவாரூரிலும் இண்டெர்நெட் மையங்கள் இருக்கின்றன) எனது வலைப்பதிவை விண்டோஸ் 98 இயங்குதளத்தில் பார்க்க நேரிட்டது. எனது வலைத்தளம் உலாவிகளின் அக்னிப்பரீட்சையில் தேரிவிட்டது என்றே தோன்றுகிறது.
பல்வேறு உலாவிகளில் எனது வலைப்பதிவு பற்றிய ஒரு பட்டியல



இயங்குதளம்ஊலாவிவலைப்பதிவின் நேர்த்தி
விண்டோஸ் 2000மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ்
வின்டோஸ் 2000இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்
விண்டோஸ் 98மொஸில்லா ஃபயர் ஃபாக்ஸ்
(மொஸில்லா வாழ்க!!)
விண்டோஸ் 98இண்டெர்நெட் எக்ஸ்புளோரர்
(முரசு அஞ்சல் கணினியில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும்)

(இன்னமும் மேக்கிண்டோஷ், லினக்ஸ் இயங்குத்தளங்களில் சோதனை செய்யவேண்டும்.)


இவை அனைத்தையும் விட எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்த விஷயம், அந்த வலை மையத்திலுள்ள அனைத்து கணினியிலும் மொஸில்லா உலாவி நிறுவப்பட்டிருந்தது தான் (ஒரு விண்டோஸ் 2000 கணினியில் தமிழா உலாவியும் இருந்தத்து).
ஆகவே வலைப்பதிவாளர்களே உங்கள் வலைப்பதிவை மொஸில்லா உலாவிகளிலும் செயல்பட வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சில சுட்டிகள்
1. http://groups.yahoo.com/group/tamilblogs/message/776
2. http://groups.yahoo.com/group/tamilblogs/message/777
3. தமிழ் வலைப்பதிவுகள் விக்கி(wiki)

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்