நாணயங்கள் - 2
ரொம்ப நாள் வரை இந்த நாணயம் எந்த காலத்தினுடையது என்பது குழப்பமாகவே இருந்தது. பின்புதான் யாரோ ஒருவர், "அட இதில் தெலுங்கு எழுத்து இருக்கிறதே" என்று சொன்னார். இதற்காகவே "30 நாட்களில் தெலுங்கு பாஷை" புத்தகதை வாங்கினேன் . நாணயத்தின் ஒருபுறம் தெலுங்கில் "విజయ" (விஜய) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
காலம்: நாணயத்தின் நேர்த்தியைக் கொண்டு இது கடைக் கால விஜயநகரப் பேரரசின் காலமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். (இவ்வளவு நேர்த்தியாக இருப்பதால் காலத்தைப் பற்றி ஒருவித சந்தேகமே இருக்கிறது).
நாணயத்தின் விட்டம்: அரை செ.மி. (நம்மூர் ஒரு பைசாவைவிட சிறியது, அது சரி ஒரு பைசா எப்படி இருந்தது என்கிறீர்களா?)
விளக்கம்:
முன்புறம்: ஒரு பெண் கடவுள், பத்மாசனத்தில் (லகஷ்மி?).
பின்புறம்: "விஜய" என்ற தெலுங்கு எழுத்துக்கள். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தேவநகரி, கிரந்தம், தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துக்கள் இருக்கும். மேலும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் எப்பொழுதும் "விஜய" என்றே அழைக்கப்பட்டது.
விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்கள் பற்றிய மிகவும் அருமையான தகவல்களுக்கு இந்த வலையகத்திற்கு செல்லவும்.
0 Shouts:
Post a Comment
<< Home