தபால் தலைகள் - 1

தபால் தலைகள் சேகரிப்பது நாணயங்களை சேகரிப்பது போல அவ்வளவு கடினமில்லை என்றாலும் என்ன மாதிரியான தபால் தலைகளை சேகரிக்கிறோம் என்பதைப்பொறுத்து கடினத்துவம் மாறுபடும். முதலில் பல்வேறு நாடுகளின் தபால் தலைகளை சேகரிக்கவேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்‌தது. ஆனால் இரண்டே மாதங்களில் எளிதாக நூற்றைம்பதிற்கும் மேலான நாடுகளின் தபால் தலைகளை சேகரிக்க முடிந்‌ததால், அரிய தபால் தலைகளை சேகரிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த முறையில் கீழிருக்கும் தபால்தலை பல வகைகளில் அரியதாகும்.



இந்‌தியாவின் முதல் குடியரசுதினத்தை குறிப்பிடும் வகையில் 1950ம் வருடம் ஜனவரி 26ம் தேதி இந்‌த தபால் தலை வெளியிடப்பட்டது.
வெகு சில தபால் தலைகளிலேயே "Republic of India" என்ற பெயரைப் பார்க்கலாம்.
இந்‌த தபால் தலையைப்பற்றி மேல் விபரங்கட்கு இங்கே செல்லவும்.

இந்‌தியத் தபால் தலை பற்றிய சுட்டிகள்:
1. 1950ல் வெளியிடப்பட்ட மற்ற தபால் தலைகள்.
2. இந்‌தியத் தபால் தலைக்கள், அகர வரிசையில்.
3. இந்‌திய தபால்துறை

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்