நாணயங்கள் - 3, தபால்தலைகள் - 2

திருவாங்கூர் சமஸ்தானம் (தற்பொழுது கேரளா) ஒரு காலத்தில் மிகவும் வல்லமை படைத்த, செழிப்பானதொரு அரசாக விளங்கியது. பிரிட்டிஷ் இந்தியாவிலும் நெடுநாள்வரை திருவாங்கூர் சமஸ்தானத்தில் அவர்களது தபால்தலைகளும் நாணயங்களுமே புழக்கத்திலிருந்தன.
திருவாங்கூர் நாணயங்களில் மகாவிஷ்ணுவின் உருவங்களே (அல்லது விஷ்ணுவின் அடையாளங்கள்) அதிக அளவில் இருக்கும். கடைக்கால திருவாங்கூர் நாணயங்களில் மட்டும் ஆங்கிலேயரின் தாக்கத்தைப் பார்க்கலாம், மன்னரின் உருவம் மேலை நாட்டு உடையலங்காரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும். திருவாங்கூர் நாணயங்களின் மதிப்பு பொதுவாக "காசு"களாலும் "சக்கரங்களா"லும் குறிக்கப்படும்.
கீழிருப்பது எனது நாணய சேகரிப்பிலுள்ள ஒரு திருவாங்கூர் நாணயம்.


காலம்: 19ம் நூற்றாண்டு

மதிப்பு: ஒரு காசு

விளக்கம்:
முன்புறம்:
மகாவிஷ்ணுவின் சின்னமான சங்கு

பின்புறம்: "ஒரு காசு" என்ற மலையாள வார்த்தைகள்.

திருவாங்கூர் நாணயம் மட்டுமல்லாது தபால் தலைகளும் அழகான(நேர்த்தியான)வை. திருவாங்கூர் சமஸ்த்தானத்தில் முதன் முதலில் 1888ம் ஆண்டு தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் இந்த தபால்தலைகள் 1953ம் ஆண்டுவரை புழக்கத்திலிருந்தன. அவ்வாறு புழக்கத்திலிருந்த தபால்தலைகளில் ஒன்று என்னிடம்.




சில சுட்டிகள்:
1. திருவாங்கூர் நாணயங்கள்
2. திருவாங்கூர் தபால்தலைகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வெளியான இந்தியத் தபால் தலை(கள்)


அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்