வாரயிறுதிப் பயணங்கள் - செட்டிநாடு

சென்ற வார இறுதியில் எனது கல்லூரித் தோழனது திருமணத்திற்காக செட்டிநாட்டுப்பக்கம் சென்றேன். செட்டிநாடு என்பது தனியே ஒரு ஊர் இல்லை (என்றுதான் நிணைக்கிறேன்), புதுக்கோட்டை, சிவகக்ங்கை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்தாம் செட்டிநாடு. செட்டிநாடு முழுவதிலும் கிராமங்களை பட்டி என்றே அழைக்கிறார்கள், இதற்கு சில விதிவிலக்கும் உண்டு, அவ்வாரொன்றுதான் "குழிபிறை, எனது நன்பனுடைய ஊர். (அது என்ன குழிபிறை? உச்சரிக்கும் பொழுது குழிப்பிறை என்றே வருகிறது).

திருமணத்திற்கு கிளம்பும் முன்னரே அங்கு என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
"நீ அங்கே எல்லாம் பார்கணும்னு சொல்லரே சரி, ஆனால் அங்கே இருக்கும் வெயிலில் என்ன நடக்கிறது என்று பார்க்கிறேன்", கிளம்பும் முன்னரே நன்பன் ஆரூடம் சொல்ல ஆரம்பித்தான், அவன் பேச்சை ஒதுக்கிவிட்டு திருமயம் கோட்டைக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன். சென்ற மாதமும் திருமயத்திற்கு சென்றிருந்தேன் ஆனால் அங்கு கோட்டைக்கு செல்ல முடியவில்லை.திருமயம் கோவிலை மட்டும் தரிசிக்க முடிந்தது.
திருமயம் பெருமாள் கோவில்
திருமயம் பெருமாள் கோவில்


திட்டமிட்டபடி வெள்ளிக் கிழமை இரவு பெங்களூரிலிருந்து கிளம்பி திருச்சி வழியாக புதுக்கோட்டையை சனிக்கிழமை காலை அடைந்தேன். நன்பன் எனக்காக ஏற்பாடு செய்திருந்த காரை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஆறாம் நம்பர் டவுன் பஸ்ஸை பிடித்து குழிபிறைக்குப் பயணித்தேன். புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் இருக்கிறது குழிபிறை. அந்த ஊருகு குழிபிறை என்று ஏன் பெயர் வந்தது என் பது பயணத்தின் போதுதான் புரிந்தது. சாலை என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக் ஏதுமின்றி ஒரே குண்டும் குழியுமாக இருந்த வழியாக இருபது கிலோமேட்டர் பயணம். சில இடங்களில் இது தான் சாலை என்பதை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்குமளவிற்கு இருந்தது. பேருந்து ஓட்டுனர் தான் சளைத்தவரில்லை என்று நிரூபிக்க பெரும் பிரயத்தனப் பட்டு அதில் வெற்றியும் கண்டுவிட்டார். ஒரு மணிநேரம் பயணத்திற்குப் பிறகு குழிபிறையை அடைந்தேன்.

அதுவரை எங்கோ ஒளிந்துக்கொண்டிருந்த சூரியனார் திடீரென்று என் மீது அதீத பாசம் கொண்டுவிட்டார், அவரது முழு பார்வையும் என் மீதே விழும்படியாகப்பார்த்துக் கொண்டார். குழிபிறையில் மொத்தம் ஐந்தாறு தெருக்களே இருந்தது, எனது நண்பனுடைய வீட்டினை அடைய பத்து தெருக்கள் நடந்தது போன்றதொரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக "பஸ் ஸ்டாப்பில் இறங்கி யாரிடம் வழி கேட்டாலும் சொல்வார்கள்" என்று சொன்ன நண்பன் அப்பொழுது அங்கு இல்லை.

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்

2 Shouts:

  • புதுக்கோட்டைக்குப் பேருந்தில் செல்லும் வழியில் புகைப்படத்தில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறேன் ..

    By Blogger Muthu, at  

  • kanna when r u going to finish ur story. do it soon

    By Anonymous Anonymous, at  

Post a Comment

<< Home