நளபாகம் - 2

I wanted to publish this in Valaippoo, but I couldn't do much with this damned 56kbps connection serving 8 computers (also called browsing center in tiruvarur). Luckily I had typed this as a draft in blogger, So I'm just releasing this (means I'm not responsible for missing characters and spelling mistakes, would try to re-edit this on monday though).

---------------------

நளபாகம் - 2

என்னுடைய நளபாக உத்திகளை எனது பதிவில்தான் வெளியிடுவதாக இருந்தேன், ஆனால்
அதற்குள் ஒரு ஞாயிற்றுக்கிழமை உருண்டோடிவிடும் என்பதால் இங்கேயே
வெளியிடுகிறேன்.

"பாஸ்தா ப்ராவாஸ்" எப்படி செய்வதென்று பார்ப்போம்.

பாஸ்தா ப்ராவாஸ்கண்ணன்)



என்னடா இது பெயரே குழப்பமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இத்தாலிய பாஸ்தாவை நம் தமிழ் நாக்கிற்கு (நாடு இல்லீங்க நாக்குதான்) ஏற்றவாறு செய்தால் வருவதுதான் "பாஸ்தா ப்ராவாஸ்". பெயருடன் ஏன் ஸ்பானிஷ்
வார்த்தையான ப்ராவாஸ் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று நிணைப்பவர்களுக்கு, ப்ராவாஸ்(bravas) என்றால் "Fierce"(இங்கு காரம்) என்று அர்த்தம் (தமிழில் அவரவ்ருக்கேற்றவாறு புரிந்துகொள்ளலாம், எனது முந்தைய பதிவைப் படித்தவர்கள் "brave" அல்லது "தைரியமான" என்ற அர்தங்கொள்ளவும்).

தேவையான பொருட்கள்:

மேக்கரோனி (macaroni) - 1 பாக்கெட்
நறுக்கிய காய்கறிகள் (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு) - 1 கப்
உப்பு - தேவையான அளவு
சமையல் என்ணை - தேவையான அளவு
மிளகாய்ப் பொடி - சிறிதளவு
கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு
அவ்வளவுதான்.

முதலில் ஒரு பாத்திரத்தில்(குக்கர் கூடாது) நீரூற்றி சிறிதளவு உப்பை போட்டு, பின்னர் மேக்கரோனியை சேர்த்து வேகவைக்கவும் (பத்து நிமிடங்கள் ஆகலாம்). அதே சமயத்தில் நறுக்கிய காய்கறிகளையும் தனியே வேகவைக்கவும்
(இதற்கு குக்கர் உபயோகப்படுத்தலாம்).
இரண்டு வேகவைத்தலும் முடிந்தபின்னர், அவற்றிலிருக்கும் தண்ணீரை வடிகட்டவும். (மறக்காமல் அடுப்பைப் பற்றவைத்த பிறகு)ஒரு வானலியில் சிறிதளவு சமையல் என்ணையை விட்டு அதில் வைக்கவும். என்ணை சிறிது
சூடானவுடன் கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு போன்றவற்றைப்போட்டு வறுக்கவும் (கறிவேப்பிலையையும் சேர்த்துக்கொள்ளலாம்). பிறகு வானலியில் இருக்கும் கடுகு-உளுத்த்ம்பருப்புடன் வேகவைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, மிளகாய்ப்பொடி போன்றவற்றை இப்பொழுது சேர்த்துக்கொள்வும். மசால வாசம் பிடித்தவர்கள் சிறிது மசாலா பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம் (மசாலாவிற்கு எங்கே போவது
என்பவர்களுக்கு, MAGGI பொன்ற நூடுல்ஸ் பாக்கெட்டுடன் வரும் மசாலாவைப் பயன்படுத்துங்கள்). சிறிது நேரம் (1 நிமிடம்) கழித்து வேகவைத்த மேகரோனியைச் சேர்க்கவும். இப்பொழுது வானலியிலுள்ளவற்றை சிறிது நேரம்
கிளறிவிட்டு பின் இறக்கிவிடவும்.

அவ்வளவுதான் பதினைந்து நிமிடங்களுக்குள்ளாகவே பாஸ்தா ப்ராவாஸ் தயார்.

அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்