மின்னஞ்சல் பதிவு - சோதனை
ரொம்ப நாட்களாக ப்ளாகரில் நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில புதிய அம்சங்கள் இப்பொழுதுவெளிவந்துள்ளன. மறுமொழிகள் அவற்றுள் ஒன்று என்றாலும், மின் அஞ்சல் மூலம் பதிவது
இன்னொன்றாகும். இதற்கு நாம் செய்யவேண்டியது எல்லாம், பதிவுகளின் "settings"ல் சென்று
மின்னஞ்சல் என்ற பகுதியில் ஒரு புதிய மின்னஞ்சலை ஏற்ப்படுத்தவேண்டியது தான் (மின்னஞ்சல்
முகவரியில் பாதி உங்கள் பெயரும் மீதி ஒரு தரவுச்சொல்லுமாக இருத்தல் அவசியம்). பிறகு
இம்மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும் அஞ்சல்கள் எல்லாம் உங்கள் வலைப்பதிவில்
பதிக்கப்பட்டுவிடும். பிறகு அந்த மின்னஞ்சல் முகவரியை யாருக்கும் தெரியாமல்
வைத்திருக்கவேண்டும், இல்லையெனில் யாரோ அனுப்பும் அஞ்சல்கள் உங்கள் பதிவில் வெளியாகிவிடும்.
இப்பொழுது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பதிவு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதே.
அன்புடன்
கண்ணன்
0 Shouts:
Post a Comment
<< Home