டிஜிடல் காமிரா

இது காமிரா வாரம் போல. எல்லா வலைப்பதிவிலும் டிஜிடல் காமிரா, ஜேம்ஸ் பான்ட் காமிரா என்று ஒரே காமிராமயம். சரியென்று நானும் காமிரா பற்றி பதியறேன். (போன வாரமே காமிரா வாங்கிவிட்டு சும்மா இருந்தா எப்படி ).

டிஜிடல் காமிரா வாங்குவதற்கு முன் நான் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் (காமிரா வாங்க நினைப்பவர்கள் கவணிக்க):


சரி இப்பொழுது நன் வாங்கிய காமிராவுக்கு வருவோம்:


(அசல் அளவுகளில்)

நிகான் தயாரிப்பான கூல்பிக்ஸ் 3700 காமிரா அது. மூன்று மில்லியன் பிக்ஸல்கள் கொண்ட படங்களை எடுக்கவல்லது. ஆனால் என்னைக் கவர்ந்தது இதிலுள்ள வீடியோ வசதி. தொலைக்காட்சிப் பெட்டியில் துல்லியமாக தெரியுமளவிற்கு வீடியோ எடுக்க வல்லது. 128 மெகா பைட் மெமரி அட்டையில் 120 நொடிகள் வரை படமெடுக்கலாம் (சற்றே தெளிவு குறைந்த படமாக எடுத்தால் 900 நொடிகள் வரை எடுக்கலாம்). வீடியோ படத்துடன் ஒலியையும் பதியலாம். வீடியோ படங்கள் அனைத்தும் க்விக் டைம் ஃபார்மாட்டில் இருப்பதால் பிஸி திரையிலும் துல்லியமாக தெரிகின்றன.

இவ்வளவும் ஒரு கையடக்க பெட்டியினுள்.



அனுப்பியவர்: கண்ணன் @ பின்தொடருங்கள்