புது வெள்ளை மழை
வலையகத்திற்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. இந்த ஒரு வார காலத்தில்:1. நான் பெங்களூரிலிருந்து கிளம்பி தில்லி வந்து சேர்ந்தேன் பிறகு
2 தில்லியிலிருந்து கிளம்பி ஃப்ராங்ஃபர்ட் வழியாக லண்டன் வந்து சேர்ந்துள்ளேன்
எனது அலுவலகம் லண்டன் அருகே உள்ள ரெடிங் என்ற இடத்தில் உள்ளது. அடுத்த ஒரு மாதம் இங்கு தான் வாசம்.
ஏற்கனவே ரெடிங்கிற்கு ஒரு முறை வந்த அனுபவமுள்ளதால் இம்முறை கொஞ்சம் சேக்கிரமே பழகிவிட்டது. சென்ற முறை ரெடிங்கிற்கு மார்ச் மாத கடைசியில் வந்ததால் பெங்களூர் போன்ற வானிலையே இருந்தது ஆனால் இம்முறை சரியான குளிர் காலத்தில் வந்துள்ளேன் என்பது கேத்ரொ விமான நிலையத்தில் இறங்கும் பொழுதே தெரிந்துவிட்டது. நல்ல வேளையாக கையுரை முதற்கொண்டு அனைத்து குளிர் போக்கிகளை கொண்டு வந்திருந்தேன்.
முதல் இரண்டு நாட்கள் சாதாரனமாகத்தான் சென்றன. ஆனால் நேற்று ஆரம்பமுதலே குளிற் சற்று தூக்கலாக இருந்தது. மாலை கோட்டலிற்கு செல்ல பஸ் நிறுத்ததில் நிற்கும் பொழுதுதான் எல்லாம் ஆரம்பித்தது. முதலில் இடியுலன் மழை, சரியான காற்று வேறு. பிறகு, என் வாழ்கையின் முதல் பனிமழை, மிகவும் இதமாஇ (இப்படி எழுதனும்னு தான் தோனுது, ஆனால் நேற்று இருபது நிமிடம் குளிரில் நடுங்கியபடி நின்றது எனக்குத்தான் தெரியும்).
ஒருமணி நேரமே பெய்த பனி மழையானாலும் விளைவு பெரிதாக இருந்தது, நேற்று இரவு வெப்பனிலை மைனஸ் நான்கு டிகிரியாக இருந்ததால் ரெடிங் இன்றும் பனிட்துளிகளும் உறைந்து போன பனிக்கட்டியுமாகக் காட்சியளிக்கிறது.
0 Shouts:
Post a Comment
<< Home