நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும்....
ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது, இந்தப் பக்கம் வந்து.வராமலிருந்ததற்கு (என்னுடைய சோம்பேரித்தனத்தைத் தவிர வேறொரு) காரணமிருகிறது. நான் என்னுடைய பெங்களூர் வாசத்தின் அடுத்த நிலையை அடைந்ததுதான் அது.
இதுநாள் வரை திருவாரூரில் நிம்மதியாக இருந்த எனது அம்மா, அப்பாவை பெங்களூர் அழைத்து வந்துவிட்டேன். மிக நீண்டநாளாக திட்டமிட்டது இப்பொழுதுதான் நடந்து முடிந்திருக்கிறது. அம்மாவையும் அப்பாவையும் திருவாரூரிலிருந்து இடம் பெயர்க்கிறேன் என்ற வருத்தம் இருந்தாலும் அவர்கள் முன்னூறு மைல்களுக்கு அப்பாலில்லாமல் என்னுடனே இருப்பார்கள் என்பதனால் ஒருவித சந்தோஷமே மேலோங்கி இருக்கிறது. அவர்களுக்கும் பத்து வருடங்களுக்குப் பின் மகனுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இதுவரை அடிக்கடி நடந்த திருவாரூர் விஜயம் இனி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும் - இது ஒரு பெரிய இடியாகவே இருக்கிறது.
என்ன செய்வது மாற்றங்கள் இயற்கைதானே
1 Shouts:
பெங்களூரில் எங்கு இருக்கிறீர்கள்? அம்மா சமையலில் நல்லா என்சாய் மாடி :)
By
Boston Bala, at
Post a Comment
<< Home